அதானி – ஹிண்டென்பர்க் அறிக்கை குறித்த வழக்கு விசாரணையில், சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்யத்தயார் என்ற ஒன்றிய அரசின் யோசனையை தலைமை நீதிபதி நிராகரித்தார். உச்ச நீதிமன்றம் இவ்விவகாரத்தில் முழு வெளிப்படைத்தன்மையை விரும்புகிறது என கருத்து.
“தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் கதிரவன், ஐ.ஏ.எஸ் அவர்கள் மறைவெய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தெரிவித்துள்ளார். ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது: உச்சநீதிமன்றம் அதிரடி.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதி. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சட்டப்போராட்டம் தொடரும். பட்ஜெட் உரையை தாக்கல் செய்த கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பேச்சு.
ஏடிஎம் கொள்ளை – தலைவன் கைது. தி.மலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்:கொள்ளை
கும்பல் தலைவன் ஆரிஃப், ஆசாத் ஆகிய 2 பேரை கைது செய்தது தனிப்படை ஹரியானாவில் கைதான இருவரையும். தமிழகம் அழைத்து வருகிறது தனிப்படை.
டெல்லி, மும்பை பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியீடு! பிபிசி குழும நிறுவனங்கள் கணக்கில் காட்டிய வருவாயும் இந்தியாவில் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரணாக உள்ளதாக அறிக்கையில் தகவல்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பத்மாவதி (62) வீட்டில் 40 சவரன் நகை திருட்டு; கொள்ளை தொடர்பாக அசோக் நகர் போலீசார் விசாரணை! பத்மாவதி தனியாக இருந்தபோது, பிளம்பிங் மற்றும் கதவுகளைச் சரிசெய்ய வந்ததுபோல் நடித்து திருடியதாகத் தகவல்!
ஆளுநர் ரவி, தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, மகான்கள், முனிவர்கள், கவிஞர்கள் நிறைந்த இந்த ஆன்மிக பூமிக்கு முதல் முறையாக வருகை தரும் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்களை மனதார வரவேற்கிறார்.- குடியரசுத் தலைவர் இன்று தமிழ்நாடு வரும் நிலையில் ராஜ்பவன் ட்வீட.
தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதை எல்லோருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டுமென்பதே அரசின் விருப்பம்; பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் தமிழ்நாடு திகழ்வதாக இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
புதிய துணைக்கோள் நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்; ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் மலிவு விலை வீடுகளை கிரெயார் கட்டித்தர வேண்டும்;சென்னை பெருநகரில் ஆன்லைனில் வீட்டுமனை அங்கீகாரம் வழங்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
திருவண்ணாமலை தேவனாம்பட்டு கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாடியதாக பிரகாஷ் என்பவர் கைது; அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, வெடி மருந்து, பேட்டரி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல். மேலும் தப்பி ஓடிய 3 பேருக்கு வனத்துறையினர் வலை வீச்சு.
வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் அதிகாரம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.
நகரமயமாதலில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நகரங்கள் – கிராமப் புறங்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சாதி வாரியான கணக்கெடுப்பு என்பது நீண்ட கால செயல்பாடு, இருந்தாலும் இந்த 2 மாதத்திற்குள்ளாக நீதிமன்றம் தெரிவித்த தரவுகளை சேகரித்து மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படாத அளவிற்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசை வலியுறுத்தி உள்ளோம். – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கி நாட்டில் முதன்முறையாக சட்டத்திருத்தம் கொண்டு வந்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு.
Leave A Comment