ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா(46) மாரடைப்பால் காலமானார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா, மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் ஆவார்.

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

யூடியூப் சேனலுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது?

புதிய தலைமுறை, ஜெயா டிவி செய்தியாளர்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் வாக்குவாதம். அண்ணாமலையை சூழ்ந்து கொண்டு செய்தியாளர்கள் சரிமாரியாக கேள்வி கேட்டதால் பரபரப்பு.ஊடகங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் பாஜக மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்.

சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை. புதியதலைமுறை செய்தியாளர் திரு.இரா.முருகேசன், சமீபத்திய கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் இருந்து காணாமல் போய் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் மரணம் குறித்து எழுப்பிய கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் , கேள்வி கேட்டவரைப் பார்த்து நீங்கள் எந்த ஊடகம் என்று கேட்க ஆரம்பித்து செய்தியாளரின் கேள்விக்கு நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசியிருக்கிறார் அண்ணாமலை.

ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக *ஊடகவியலாளர்கள் , எந்த ஊடகம் என்பதை கேட்பதுடன் அவர்களின் கேள்விக்கும் செய்தி சேகரிக்கும் பணி குறித்தும் அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல..இந்த நிதானமற்ற போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. இந்த மோசமான அணுகுமுறையை மிரட்டல் போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசியலில் வளர்ந்து வரும் திரு.அண்ணாமலை அவர்கள் ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்டு நயத்தகு நாகரீக உறவை ஊடகங்களுடன் பேண கற்றுக் கொள்ள வேண்டும்.

பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்.

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவராக முன்னாள் வில்லிவாக்கம் எம்எல்ஏ ரங்கநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை – அமைச்சர் எ.வ.வேலு
ஒ.பி.எஸ் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என இபிஎஸ் குற்றச்சாட்டு.

யார் யாருக்கு ஆதரவுளிக்கிறார்கள் என்பதை நாங்கள் கருத்தில் வொள்ளவில்லை, கருத்தில் கொள்ளத் தேவையும் இல்லை: நீதிபதிகள்.

ஜூலை 11 அன்று பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து இதுவரை ஓபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்யவில்லை” – ஈபிஎஸ் தரப்பு வாதம்.

11 ஜூலைக்கு பிறகு தான் அனைத்தும் மாறியது அப்படி தானே? எனவே நிங்கள் எதிர்பார்ப்பது என்ன? நீதிமன்றம்

ஒருங்கிணைப்பாளர்:
இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலை இருந்ததோ அதுவே தொடர வேண்டும் : ஒபிஎஸ்
அதிமுகவின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்து ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கி இருந்த நிலையில் இந்த பதவியில் இருப்பவர்கள் செயல்பட விடாமல் தடுக்கும் ஜூலை மாதம் நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிவழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

அதிமுக பொதுக்குழு விவகாரத்தை இந்த வாரமே விசாரித்து முடிக்க விரும்புகிறோம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து. பல மாதங்களாக நிலுவையில் இருந்து வரும் அதிமுக உள் கட்சி குழப்பம் ஒரு வழியாக முடிவிற்கு வருகிறது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கொடைக்கானல் வருகை.