சிங்கிகுளம் சமண மலை கோவிலில் நள்ளிரவு பௌர்ணமி பூஜை- பலர் பங்கேற்பு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சிங்கிகுளம் சமண மலை கோவிலில் பௌர்ணமி பூஜை நடந்தது. சிங்கிகுளம் மலையில் அமைந்துள்ள 1500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சமணர் கோவில் அப் பகுதியின் சமய நல்லிணக்க மையமாக கருதப்படுகிறது. இங்குள்ள கோவிலில் சமண முனிவர்களுடன் இந்து கடவுள் முறை வழிபாடுகளும் தொன்று தொட்டு நடந்து வருகிறது. நேற்று இரவு மாசி மாத மகம் நட்சத்திர நாளில் நிகழ்ந்த பௌர்ணமியை ஒட்டி சிறப்பு பௌர்ணமி பூஜைகள் நடந்தது. இதில் விநாயகர், பகவதி அம்மன், சப்த கன்னியர், சப்தரிஷிகள் மற்றும் சமண முனிவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து நள்ளிரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழித்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
கேரளா: பிரசித்த பெற்ற ஆலயங்களுள் மிகமுக்கியமானது திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் திருக்கோவில் மதுரையை எரித்த கண்ணகி குழந்தையாக கிள்ளியாற்றின்கரையில் அவதரித்தநாளான மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பௌர்ணமி நாள் ஆற்றுகால் பொங்காலை திருவிழா நடைபெறுகிறது மதுரையை எரித்த கோபத்திலிருந்த கண்ணகியை பெண்கள் பொங்கலிட்டு அமைதிபடுத்தி வழிபட்டனர் என்பது வரலாறு அதன் காரணமாக ஆண்டுதோறும் பலலட்சகணக்கான பெண்கள் விரதமிருந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டுவருகின்றனன் கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனாஊரடங்கு காரணமாக பொது இடங்களில் பொங்கல் விழா நடைபெறவில்லை இதையடுத்து இந்த ஆண்டு ஆற்றுகால் பொங்கல் விழா கடந்த மாதம் 27ஆம் தேதி காப்புகட்டி துவங்கியது தொடர்ந்து பொங்கல் இன்று நடைபெற்றுவருகிறது முன்னதாக ஆற்றுகால் பகவதி அம்மன் ஆலய முன்பாக அமைக்கபட்டிருந்த பண்டார அடுப்பில் ஆலய மேல்சாந்தி ஈஸ்வரன் தம்பூதிரி தீமூட்டினார் இந்நிகழ்ச்சியில் கேரளா அமைச்சர்கள் அனில்,சிவன்குட்டி,ஆன்றனி ராஜூ ,இளம் மேயர் ஆரியா ராஜேந்திரன் எம்பிக்கள் முரளீதரன்,சசீதரூர்,ரஹீம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
தொடர்ந்து திருவனந்தபுரம் மாநகர பகுதிகளான தம்பானூர்,மணக்காடு,கிழக்கேகோட்டா ,அம்பலதற,பாளையம் வெள்ளையம்பலம்,சாக்கை ஈஞ்சக்கல் உட்பட நகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பெண்கள் திரளாக குவிந்து சாலைகளிலும் வீட்டுவளாகங்களிலும் பொங்கலிட்டு வழிபட்டனர் சுமார் 20லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பொங்கலிட்டது குறிப்பிடதக்கது.
முக்கூடல் முத்துமாலையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டிய லட்ச தீபம்:
நெல்லை : முக்கூடலில் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் பிரசித்திபெற்ற முத்துமாலையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் ஆண்டுகள் ஆன நிலையில் முத்துமாலை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதன்படி மகா கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி லட்ச தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காலையில் கோவில் முன் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்நது மாலையில் லட்ச தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிலா ஒளியும் தீப ஒளியும் ஒரு சேர இந்த லட்சதீப நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவில் வளாகம், கோவிலை சுற்றிலும் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
மேலூர் அருகே அழகர்கோவிலில் அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் சுவாமி மாசி தெப்ப திருவிழா அதிவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்:
தமிழகத்தின் தென்திருப்பதி என்று அழகர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கள்ளழகர் என்ற ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவமாகும். இவ்விழா நேற்று மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. இதில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று காலை 7:20 மணிக்கு தொடங்கியது. ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளழகர் என்ற ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி மேலதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பாடானார். மண்டுக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஷ்கரணிக்கு செல்லும் வழியில் வழி நெடுகிலும் நின்று சேவை சாதித்து பொய்கைகரைப்பட்டி தெப்பத்திற்கு வந்து சேர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து தெப்பத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று பகல் முழுவதும் தெப்பத்தில் இருக்கும் அவர் மீண்டும் மாலையில் அதே தெப்பத்தில் எழுந்தருள்வார். அதனைத் தொடர்ந்து இன்று இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேரும். இத்துடன் இந்த மாசி தெப்பத்திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் மற்றும் துணை ஆணையர் ராமசாமி ஆகியோர் செய்திருந்தனர். இவ்விழாவைக் காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Leave A Comment