Beauty tips

மேக்கப் – ஐ நேசிக்கும் பெண்களே உங்களுக்காக…!!

Rate this post

நீங்கள் மேக்கப்பை நேசிப்பவரா? மிகவும் நுட்பமாக மேக்கப் செய்து கொண்டு, அலங்காரமாக காட்சி தருவதில் விருப்பம் கொண்டவரா? தினமும் பணிக்கு செல்வதற்கு முன், முகத்தை முழு அலங்காரம் செய்து கொள்ள போதிய நேரமும் இருக்கிறதா?கடைசி கேள்வி உங்கள் உற்சாகத்தை குறைத்திருக்கலாம் அல்லவா? மிகவும் பிஸியான பெண்களே, உங்கள் கவலை எங்களுக்கு புரிகிறது.

உங்கள் காலை நேரத்தை உடனடியாக அழகாக்கி, உங்கள் வாழ்க்கையை எளிமையாக்கும் நான்கு பொருட்களை உங்களுக்காக கவனமாக தேர்வு செய்துள்ளோம். இவை பயணத்திற்கும் ஏற்றவை என்பதோடு மற்ற வேலைகளையும் கவனிக்கலாம். இவற்றை உங்கள் கைப்பையில் போட்டுக்கொண்டு, போகிற போக்கில் கூட தயாராகலாம்.

1 எளிதான பவுண்டேஷன் கிரீம்!

பவுண்டேஷன் மிகவும் அவசியமானவை. அதிலும் குறிப்பாக உங்களுக்கு நேர்த்தி குறைவான சருமம் இருந்தால், அவை மிகவும் அவசியம். ஆனால் இங்கு உண்மையை ஒப்புக்கொள்வோம். காலை நேரத்தில் முழுமையான பவுண்டேஷனை பயன்படுத்துவதற்கான நேரம் உங்களுக்கு இல்லை. அதாவது நீங்கள் தூக்கத்தை நேசிப்பவர் என்றால்,

உங்கள் குறைகளை மறந்து, பூசிக்கொள்ள அதிக நேரம் தேவைப்படாத பொருளை தான் நீங்கள் நாட வேண்டும். உங்கள் சருமத்தின் மீது லேசாக அமரக்கூடிய பிபி கிரீம் அல்லது சிசி கீரிமை நாடவும். நீங்கள் குஷன் பவுண்டேஷனையும் நாடலாம். லாக்மே 9 டொ 5 கம்ப்லக்‌ஷன் கேர் சிசி கிரீம், தி லாக்மே மேஜிக் ஸ்கின் டிண்ட்ஸ் சாப்லே அல்லது லாக்மே ஆர்கன் ஆயில் செரம் பவுண்டேஷன் ஆகியவற்றில் இருந்து நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

2 காம்பேக்ட் பவுடர்!

வெளியே செல்லும் எல்லா பெண்களின் கைப்பையிலும் இருக்க வேண்டிய பொருள் காம்பேக்ட் பவுடர். வியர்வை, ஈரப்பதம் மற்றும் முகத்தை தொடுவது உங்கள் பவுண்டேஷனை பாதிக்கிறது. எனவே நண்பகல் அளவில் உங்கள் மேக்கப்பை டச்சப் செய்வது அவசியம். ஆக, உங்கள் கைப்பையில் காம்பேக்ட் பவுடர் வைத்திருப்பது மிகவும் உதவியாக இருக்கும்.  காம்பேக்ட் பவுடர் உங்கள் சருமத்திற்கு மென்மையான பளபளப்பை தருவதோடு, பவுண்டேஷன் நீடித்து இருக்கவும் உதவுகிறது. வெப்பம் மிகுந்த நாட்களில் வெளியே செல்வதால் உண்டாகும் பாதிப்பாக துளைகளையும் அடைக்கிறது.

லாக்மே சன் எக்ஸ்பர்ட் அல்ட்ரா மேட்டே எஸ்.பி.எப் 40 றிணீ+++ , ஐ நீங்கள் தேர்வு செய்யலாம். இது உங்கள் முகத்தில் தீங்கு தரும் யு.வி கதிர்களில் இருந்து காக்கும் எஸ்.பி.எப் கொண்டுள்ளது.

3 மஸ்கரா!

பெண்களுக்கு மிகவும் தேவையான பொருட்களில் மஸ்காரா ஒன்று. இவை உங்கள் கண்களுக்கு உடனடியாக தீர்கமான தன்மையை அளித்து, உங்கள் கண் இமைகள் புத்துணர்ச்சியுடன் இருக்க வழி செய்கிறது. எப்போது உங்கள் கண்களை மெருகேற்ற மஸ்காரா தேவைப்படும் என்று தெரியாது என்பதால், அதை எப்போதும் கைப்பையில் வைத்திருப்பது நல்லது. மேலும், சுருளான மைகள் தேவை எனில், லாக்மே கர்லிங் மஸ்காராவை முயற்சிக்கவும். அதே போல இமைகளை நீளமாக தோன்ற வைக்க விரும்பினால் தி லாக்மே பிளட்டர் சீக்ரெட்ஸ் டிராமட்டிக் ஐஸ் மஸ்காரா ஏற்றதாக இருக்கும்.

4 2&-3 லிப்ஸ்டிக்!

நீங்கள் அநேகமாக பலவகையான லிப்ஸ்டிக்களை பயன்படுத்துபவராக இருக்க வேண்டும், அப்படி என்றால் கையை உயர்த்துங்கள்.

வாய்ப்புள்ள போதெல்லாம் உங்கள் கைப்பையில், ஒரு சில ஷேட் லிப்ஸ்டிக்குகளை வைத்திருக்கவும். 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை லிப்ஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். மனநிலை அல்லது சூழலுக்கு ஏற்ப பொருத்தமான ஷேடை பயன்படுத்தலாம். எப்போது எந்த வண்ண லிப்ஸ்டிக் தேவை என சொல்ல முடியாது என்பதால் கைவசம் சில வண்ணங்களை வைத்திருக்க வேண்டும்.

புதிய லாக்மே கரீனா கபூர் கான் அப்ஸல்யூட் பவுட் டிபைனர் கலெக்‌ஷனில் இருந்து நீங்கள் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.  லிப்ஸ்டிக்கை விரைவாகவும் பயன்படுத்தலாம் தானே. பிஸியாக இருக்கும் பெண்கள் தங்கள் முகத்தை பொலிவாக வைத்திருக்க கைவசம் இருக்க வேண்டிய அழகு சாதன பொருட்கள் இவை.

Comment here