“வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் சுண்டைக்காய்”

சுண்டைக்காய் பெரியவகை செடி இனத்தை சேர்ந்தது.

5 முதல் 10 அடி உயரம் வரை வளரும். காடுகளில் தானாகவே வளருவதை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டை என்றும் அழைக்கிறோம். பால் சுண்டையை பற்றிதான் இதில் காண இருக்கிறோம். இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது.

சுண்டைக்காய்ச் செடி: வீட்டுக் கொல்லைப்புறத்துலயும், காட்டு, மேட்டுலயும் இயற்கையாவே வளர்ந்து நிக்குது.

இந்தச் செடிக்கு யாரும் உரமோ, தண்ணியோ கூட கொடுக்கிறதில்ல. ஆனாலும், கொத்து, கொத்தாக காய்ச்சுக் குலுங்கும்.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதனை பச்சையாகப் பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுண்டைக்காய் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுகசப்புச் சுவை உடையது.

இதை வாரம் இருமுறை சாப்பிட்டுவந்தால் ரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.

மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மும்முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமிகள், மூலக் கிருமிகள் போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று கொடுப்பார்கள். அதில் அதிகமாகச் சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான்.

தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்திகொண்டது’’ னு சித்த மருத்துவம் சுண்டைக்காயின் மருத்துவ குணத்தைப் பெருமையா பேசுது.

மலையில விளையுற, காட்டுச்சுண்டைக்கும், சமவெளியில விளையுற நாட்டுச்சுண்டைக்கும் மருத்துவ ரீதியா கொஞ்சம் வித்தியாசம் உண்டு. இதனால, காட்டுச் சுண்டையைத்தான் பெரும்பாலும் மருந்துக்குப் பயன்படுத்துவாங்க..

ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும்.

இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது.

சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது.

பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் இளம்வயதினரிடையே ஊட்டச்சத்து பற்றாக்குறை நிலவி வருகிறது. இதை போக்க சுண்டைக்காய் உதவும்.

குழந்தையாக இருக்கும்போதே அவர்களுக்கு சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிட பழக்கவேண்டும். இதை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்.

மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும்.

மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும். தவறான உணவுப் பழக்கம் காரணமாக பலர் வயிறு சம்பந்தபட்ட நோய்களால் துன்பப்படுகிறார்கள்.

அமீபியாஸ் என்ற வயிற்று நோயால் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை மலச்சிக்கலும், அதிக மலப் போக்கும் மாறி மாறி தொந்தரவு செய்யும். புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளும் தோன்றும்.

இதனால் மனசோர்வு ஏற்படும். இத்தகைய நோயாளிகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.

சுண்டைவற்றல் சூரணத்தை தினம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து ஒரு மாதம் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் தொல்லை தரும் வயிற்று நோய்களில் இருந்து விடுபடலாம். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது.

கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகின்றது. இதில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகள் உணவில் சுண்டைக்காயை அடிக்கடி பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.