உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகைக்கு 2 நாள் கழித்து நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை (15-ந்தேதி) தினத்தில் அவனியாபுரத்திலும், மறுநாள் (16-ந்தேதி) பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி உள்ளன
ஜல்லிக்கட்டு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. போட்டியின் போது காளைகளுடன்
2 பேருக்கு மட்டுமே அனுமதி.

காளையர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். காளை உரிமையாளர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் – தமிழக அரசு.

திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி.. ஜல்லிக்கட்டின் போது மாவட்ட நிர்வாகம் நேரடியாக 500 டோக்கன்களை மட்டுமே வழங்கும். ஜல்லிக்கட்டு நடத்தும் ஏற்பாட்டாளர்கள் டோக்கன்களை வழங்க முடியாது.
-மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்.

ஜல்லிக்கட்டு – போலீசார் தடியடியால் பரபரப்பு. தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் சலசலப்பு.அனுமதியின்றி காளைகளுடன் சிலர் உள்ளே நுழைய முயன்றதால் போலீசார் தடியடி நடத்தி கலைப்பு.காளையர்களுக்கு டோக்கன் கொடுக்கும் இடத்திலும் அனுமதியின்றி குவிந்ததால் தடியடி.

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஆட்சியருக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாடுபிடி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு: மதுரையில் இந்தாண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஒரு மாடுபிடி வீரர் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்
– மாவட்ட நிர்வாகம்.

தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கியது:

ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 425 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.