சேலம் மாவட்டம் வாழப்பாடி : ரெயில் வரும் போது செல்பி எடுத்த வாலிபர் ரெயில் மோதி பலி
வாழப்பாடி அருகே உள்ள புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் இருக்கும் ரயில் பாதையில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறதுசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது சிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காங்கேயத்தான் (வயது 22 ) இவரும் இவரது நண்பர்களும் சபரி மேலும் இருவர் செல்போனில் பேசியபடி பேசிக்கொண்டு இருந்ததாகவும் செல்பி எடுத்துக் கொண்டிருந்ததாகவும் ரயில் வருவதை கவனிக்காமல் நடந்து வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் காங்கேயத்தான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சபரி என்பவர் காயங்களுடன் வாழப்பாடி அரசு மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதுகுறித்து வாழப்பாடி காவல்துறையினரும் ரயில்வே போலீசாரம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது விருத்தாசலம் -சேலம் பயணிகள் ரயில் வந்தது, ரயில் வருவதை கவனிக்காமல் செல்பி எடுத்துக் கொண்டிருந்த காங்கேயன் மீது ரயில் மோதி அதே இடத்தில் படுகாயம் இறந்து விட்டார். சேலம் ரயில்வே போலீசார் காங்கேயன் சடலத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

_______________________________________________________________________________

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்தில் இரண்டு பேர் படுகாயம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை எதிரி இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனம் மற்றும் கார் சாலையோரம் உள்ள 30 அடி பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த குறிஞ்சிப்பாடிய பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (24) மற்றும் முகாசஃபரூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபா (25) ஆகியோர் படுகாயம் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

________________________________________________________________________________

தினந்தோறும் குடித்துவிட்டு வரும் தம்பியை தட்டி கேட்ட அண்ணன் அடித்துக் கொலை :

காஞ்சிபுரம் அடுத்த திம்மராஜாம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மற்றும் வடிவேல் இருவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர். வடிவேல் அவ்வப்போது குடித்து விட்டு வருவதாகவும் இரவில் சண்டை போடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

இன்று காலையில் வழக்கும் போல் குடித்து விட்டு வந்த வடிவேலை சரவணன் தட்டி கேட்டுள்ளார் இதனை பொறுக்க முடியாது தம்பி வடிவேல் கையில் கட்டை எடுத்து பலமாக தாக்கியதில் சரவணன் சம்பவம் இடத்திலேயே உயிரிழப்பு.

உயிரிழந்த சரவணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வாலாஜாபாத் போலீஸ் விசாரணை கொண்டு வருகின்றனர்.