செய்யாறில் பல்வேறு பகுதிகளில் செய்யாறு நகர கழக சார்பில் அ ம மு க
கட்சி கொடி ஏற்றி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம்: செய்யாறில் அமமுக கட்சியின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் நாளைய முதல்வர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க செய்யார் நகரக் கழகத்தின் சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர்
மா .கி வரதராஜன் தலைமையில் அண்ணா நகர் ,ஆரணி கூட்டு சாலை, கொடைநகர், திருவோத்தூர் ,காந்தி சாலையில் ,உள்ள அண்ணா சிலை, ஆகிய பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.

வெயில் வாட்டி வந்த நிலையில் பொதுமக்களுக்கு தாகம் தணிவிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் , தர்பூசணி, குளிர்பானங்கள், மோர் ஆகியவற்றை கொடுத்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் N G பார்த்திபன், செய்யாறு நகர கழக செயலாளர் ராஜசேகர், செய்யாறு நகர கழக தொண்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.