அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள காளைகளுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்.

பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில்,சம்பவம் நடந்த அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது – டிஜிபி சைலேந்திரபாபு.

“இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்”.
-தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

அ.தி.மு.க பொதுக்கு மு தொடர்பான ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை மூன்றாவது நாளாக உச்சநீதிமன்றத்தில் சற்றுமுன் துவங்கியது.
பன்னீர்செல்வம் தாப்பு வழக்கறிஞர் ராஜேஷ்குமார் வாதாடி வருகிறார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறவுள்ள “சென்னை இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாளுக்கு ஒருமுறை
விடுமுறை வழங்க முடிவு”
-தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

புரபசனல் கொரியர் நிறுவனத்தில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.வருமான வரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் 50க்கும் மேற்பட்டோர் 3 நாளாக சோதனை. நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, கிண்டி உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை.

மதுரை மேலூரில் கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது வட்டாட்சியரை தாக்கிய வழக்கு.மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க அழகிரி உள்பட 19 பேர் இன்று நேரில் ஆஜர்.

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு பெண் உட்பட நாலு பேரிடம் 17 லட்சம் பெற்று போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த திண்டுக்கல் ஊர் காவல் படையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை.

ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி. சுதாகர் எனது நீண்ட கால நண்பர்; நல்ல நண்பரை இழந்துவிட்டேன் – அஞ்சலிக்குப் பின் நடிகர் ரஜினி உருக்கம்.

அமேசானில் ஏறக்குறைய 3,00,000 பணியாளர்கள் இருந்தனர். அதில் 6% கார்ப்பரேட் பணியாளர்கள் (18 ஆயிரம்) இந்த பணிநீக்கம் மூலம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மதுரையைச் சேர்ந்த மாணவர் கோகுல் ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் கூறிய சுவாதிக்கு எதிரான அவமதிப்பு வழக்கை ரத்து செய்ய கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி -உச்சநீதிமன்றம்.

சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது எனது ஆசை – கமல்ஹாசன். பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது – ம.நீ.ம.கட்சி தலைவர் கமல்ஹாசன்.

தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம்.

இந்தியாவிலேயே பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம்.

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் வரும் 8ம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கும் என அறிவிப்புஇன்று நடக்க இருந்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.

சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடை கேசியர் பாலகுமரன் என்பவரை அடையாளம் தெரியாத நபர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட்டம் சமயபுரம் போலீஸார் விசாரணை.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆபரேஷன் தியேட்டரில் கொடூரம்: மயக்க நிலையில் இருந்த பெண் நோயாளி பாலியல் வன்கொடுமை.

காட்டுப்பன்றிகளை விரட்டினால் வனத்துறை வழக்குப் பதிவு செய்கிறது” – பழனி விவசாயிகள் வேதனை.. காந்தாரா பட பாணியில் நிகழும் சம்பவங்கள்.. ஆர்.டி.ஐ மூலம் பெற்ற அதிர்ச்சி தகவல்கள்.

புதினுக்கு புற்றுநோய்; சீக்கிரமே இறந்துவிடுவார்’ – உக்ரைன் உளவுத்துறை தலைவர் பகீர் தகவல்.

கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்குமாறு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை..

அண்ணாமலையை பதவியிலிருந்து தூக்க.. நிறைய ஆதாரங்கள் என்கிட்ட இருக்கு.. காயத்ரி ரகுராம்.

தமிழ்நாடு பெயர் மாற்றம் விவகாரம் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தை திரும்ப பெற வேண்டும்: வைகோ கண்டனம்.

செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினரான பாஸ்கர் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது பாஸ்கரிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கைது; எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

பாஸ்கர் நடத்தி வந்த பர்னிச்சர் கடையிலிருந்து ₹48 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை பெருநகர காவல்துறையின் ‘சிற்பி’ திட்டத்தின் கீழ், 5000 மாணவ மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது.

கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள முருகன்புதூர் சமையல் செய்த போது சேலையில் தீ பற்றி ஏற்பட்ட தீ விபத்தில் சுப்புலட்சுமி என்ற பெண் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்..

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அறங்காவலர் கோ.ப.அன்பழகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.