பழனி : ஆயக்குடி கோம்பைப்பட்டி மூலக்கடை பகுதியில் நேற்று இரவு பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் யானைகள் வந்ததால் பரபரப்பு.மேலும் அப்பகுதியில் உள்ள விவசாயி குணசேகரின் மக்காச்சோள தோட்டம் மற்றும் பிரபு கரும்பு தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் அதிர்ச்சி வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து யானையை அடர்ந்த வனத்துக்குள் அனுப்ப வேண்டும் என கோரிக்கை.
சென்னை : தியாகராயர் நகர் BN சாலையில் சென்ற ஆட்டோவின் மீது திடீரென மரம் ஒன்று விழுந்ததில், சம்பவ இடத்திலேயே ஆட்டோவில் பயணித்த பெண் பயணி பலி; ஆட்டோ ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார்; தேனாம்பேட்டை போலீசார் விசாரணை.
திண்டுக்கல் : மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட கொடைரோடு அருகே தனது 10 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்ததாக தந்தை ராமசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி மற்றும் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் :
இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வர முயன்ற மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நாலு பேரை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படை நடுக்கடலில் வைத்து கைது செய்து விசாரணைக்காக தலைமன்னார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மை காலமாக அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு வரத் தொடங்கி உள்ளனர் இந்நிலையில் இன்று காலை மன்னர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கள்ளத்தனமாக படகுமூலம் ராமேஸ்வரத்துக்கு வர முயன்றனர் அப்போது நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இலங்கை கடற்படையினர் படகை சுற்றி வளைத்து நான்கு பேரையும் கைது செய்து படகையும் பறிமுதல் செய்து விசாரணையாக தலைமன்னார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
விழுப்புரம் : மேல்மலையனூர் அருகே இயங்கி வரும் தார் தொழிற்சாலையை மூட கோரி மாவட்ட ஆட்சியர் பழனியிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். சங்கிலிகுப்பம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் தார் தொழிற்சாலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு விளை நிலங்களும் பாதிக்கப்படுவதாக புகார். தனியார் தார் தொழிற்சாலையை மூட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக சங்கிலிகுப்பம் கிராம மக்கள் எச்சரிக்கை.
திருப்பூர்: தெக்கலூர் பகுதியை சேர்ந்த செல்வி என்ற பெண் கடந்த சில நாட்கள் முன்பு அம்மாபாளையம் பஸ் நிறுத்தத்தில் திருப்பூரில் இருந்து கோவை செல்லும் தனியார் பேருந்தில் தெக்கலூர் செல்ல ஏறியபோது நடத்துனரால் தெக்கலூரில் பேருந்து நிற்காது என இறக்கி விடப்பட்ட செல்வி அதே பேருந்தின் பின் சக்கரம் ஏறி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த திருமுருகன்பூண்டி போலீசார் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கைது செய்தனர். இந்த விபத்தை கண்டித்தும் உயிரிழந்த செல்வியின் இரண்டு மகள் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அனைத்து பேருந்துகளும் தெக்கலூர் வந்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்து தெக்கலூர் பகுதி பொதுமக்கள் இன்று 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி : பாலக்காடு அருகே உள்ள காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் , திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் வைக்கோல் ஏற்றுவதற்காக வந்துள்ளார், வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஊர் திரும்புகையில் வண்டியின் மேல் சென்ற மின்சார கம்பியினை பார்க்காமல் இயக்கியுள்ளார் இதனால் வைக்கோல் மீது உரசிய மின் கம்பியில் இருந்து தீப்பொறி வைக்கோலின் மீது தீ பரவ இதன் காரணமாக தீப்பிடித்து எரிய தொடங்கிய சிறிது நேரத்திலே முற்றிலுமாக மினி வேன் எரிந்து சேதமானது. சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் தீயணைப்புத்துறையினர் மேலும் தீ பரவாமல் இருக்க தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இது குறித்து அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி ; சங்கராபுரம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த கால்நடைச் சந்தை நடைபெறும் இடம் திருக்கோவிலூரில் இருந்து சங்கராபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் ஆடுமாடுகளை சாலையின் நடுவில் நிறுத்தி வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் இந்த சாலையின் வழியே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூலி தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் என பலர் இந்த சாலையை கடந்து சங்கராபுரம் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு பள்ளிகளுக்கு மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்கிறார்கள்,இவர்களால் சரியான நேரத்தில் பள்ளிக்கும் வேலைக்கும் செல்ல கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம் செவ்வாய்க்கிழமை அன்று நடக்கும் கால்நடை வாரச்சந்தை தான் என பொதுமக்கள் குற்றம் சாட்டு வருகின்றனர். இந்த வாரச்சந்தை நடைபெறுவதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பொது மக்களின் குறைதீர்க்கும் கூட்டத்தில் அளித்த மனுவை ஏற்றுக் கொண்டு வேறு மாற்று இடமும் ஏற்பாடு செய்து தந்தார்.ஆனால் அதை வியாபாரிகள் பயன்படுத்துவதில்லை சாலையை ஆக்கிரமித்து சாலையின் நடுவிலேயே வியாபாரத்தை நடத்தி வருகிறார்கள் இதனை பலமுறை ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் கூறி இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சென்னை : வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது என பீகார் மாநில அதிகாரி பாலமுருகன் பேட்டி அளித்துள்ளார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தாக்குவது போன்ற விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த போலி செய்தியால் சிறிய அச்ச உணர்வு தொழிலாளர்களிடம் ஏற்பட்டது, அனைவரும் தற்போது உண்மை நிலை தெரிந்துள்ளது, மேலும் தமிழ்நாடு போலீஸ் மற்றும் பிற அமைப்புகள் கொடுத்த ஆதாரத்தின் அடிப்படையில் அவை அனைத்தும் வதந்தி என நிரூபணம் ஆகியுள்ள நிலையில் தொழிலாளர்கள் இடையே இருந்த அச்ச உணர்வு நீங்கி சகஜ நிலைக்கு வருகின்றனர். வடமாநில தொழிலாளர்களை சந்தித்து கருத்து கேட்ட பின் பீகார் மாநில அதிகாரி பாலமுருகன் பேட்டி அளித்துள்ளார்.
Leave A Comment