எங்கள் தலைவர் ஓபிஸ் சொன்ன கருத்து ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமைநீங்கில் அனைவருக்கு தாழ்வு என்ற கருத்தில் இருக்கிறார். அவரது கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆதரிக்கிறார்கள். பதவியில் இருப்பவர்கள் எதிர்க்கிறார்கள். தொடர்ந்து எதிர்த்தால், எடப்பாடி பழனிசாமியை ஒதுக்கிவிட்டு நாங்கள் ஒன்றுசேர்வோம்.

அனைவரும் ஒன்றுசேர்வது தான் எங்களுடைய விருப்பம். அதாவது எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், சசிகலா, தனிக்கட்சி வைத்துள்ள சண்முகம், ஒபிஎஸ் ஆகிய அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒற்றுமைக்கு ஒத்துவரவில்லை என்றால் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது தான் உண்மை. அது விரைவில் நடைபெறும்.

திமுக எங்களை ஆட்கொள்ளவில்லை. அதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாடோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணியில் இருப்போம். எங்கள் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.