நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விவேக் எழுதிய ‘அப்பத்தா’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை வடிவேலு பாடியிருந்தார். அது ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது படத்தின் ஓடிடி உரிமம் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. தொலைக்காட்சி உரிமம் சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.
Leave A Comment