எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை.

அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருபவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்– முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் பிப்ரவரி 20ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் ஓ.பன்னீர்செல்வம். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

“என் வீட்டில் ரெய்டு நடத்துங்கள் பார்ப்போம்..”- சவால் விட்ட சீமான்.

ஜார்க்கண்ட் அற்புதமான மாநிலம், அதிகமான பழங்குடி, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கின்ற மாநிலம்; அவர்களுக்கு உழைக்கின்ற வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளனர்”
– சென்னையில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

நாங்க ஆட்சிக்கு வந்தால் அதிமுக, திமுக வீட்டில் உண்மையிலேயே ரெய்டு..தப்பிக்க வாய்ப்பில்லை ராஜா – சீமான்