தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு:

காவலர் நல வாரியத்தின் டிஜிபியாக கருணாசாகர் நியமனம்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனராக சைலேஷ்குமார் யாதவ் நியமனம்.

குடியரசு தலைவரை நாளை திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு சந்திக்கிறார்காலை 11:45 மணி அளவில் சந்திக்க குடியரசு தலைவர் நேரம் ஒதுக்கி உள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. தமிழக ஆளுநர் குறித்து புகார் தெரிவிக்கப்பட உள்ளது.

அமெரிக்கா: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ₹81.57ஆக அதிகரிப்பு!

சென்னை: மெட்ரோ ரயிலின் 2ம் கட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5ல் தண்டவாளங்களை அமைக்க ₹163.31 கோடி ஒப்பந்தம்!ஜப்பான் Mitsui & co என்ற நிறுவனதுடன் இந்த ஒப்பந்தம் கையெழுதானது!

திமுக கொடுத்ததை ஆளுநர் அப்படியே வாசித்துள்ளார்””ஆளுநர் எந்த இடத்திலும்
தனது சொந்த கருத்தை திணித்து பேசவில்லை””சில விஷயங்களை ஆளுநர் தவிர்த்துள்ளார், காரணம் அது பொய்”. – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திண்டுக்கல்லில் பேட்டி

பழனி: குடமுழுக்கு – அனுமதி சீட்டு அவசியம்.”பழனி குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்”/”தேர்ந்தெடுக்கபட்ட 3000 பக்தர்கள் மட்டுமே குடமுழுக்கு விழாவிற்கு அனுமதிக்கப்படுவார்கள்”.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகம்.

அமெரிக்கா: முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு.விமான போக்குவரத்து துறையின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக.அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கம்.சர்வரை சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்.

ஜார்கண்ட்: நக்சலைட் தேடுதல் வேட்டையின்போது குண்டு வெடிப்பு நிகழ்ந்து, 5 துணை ராணுவ வீரர்கள் படுகாயம்! ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராஞ்சிக்கு கொண்டுவரப்பட்டு, மருத்துவமனையில் அனுமதி!.

ஆளுநர் தமிழகம் என்று குறிப்பிட்டது ஒன்றும் தவறில்லை ஆளுநரை தமிழக மக்களுக்கு எதிரியாக திமுக அரசு சித்தரிக்கக் கூடாது.
ஆளுநரை வேலை வாங்க வேண்டியது முதல்வரின் கடமை. அதே போல் முதல்வரை வேலை வாங்குவது ஆளுநர்.

ஆளுநர் தமிழக அரசு சண்டை போடுவது நியாயமா இதனால் பாதிக்கப்படுவது சமானியன மக்கள் தான் நிதி அமைச்சர் சொல்லிட்டாரு பழைய ஓய்வூதிய திட்டம் வர போவதில்லை. அதுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். அரசியலில் துணிவாக இருப்பேன். வாரிசு அரசியலை எதிர்க்கிறேன். திண்டுக்கல்லில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

ரிலையன்ஸ் ஜியோ: நிறுவனம் தமிழ்நாட்டில் மதுரை, கோவை, திருச்சி, ஓசூர், சேலம் மற்றும் வேலூர் ஆகிய ஆறு நகரங்களில் 5G சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

சிவகங்கை: அண்டக்குடி புதூர் கிராமத்தில் ’நாளை நமதே’ என்ற வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டி, அரசு பள்ளிக்கு தேவையான டிஜிட்டல் கரும்பலகைகள், LED டிவிக்கள், கணினிகள், பிரிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை ‘சீர் வரிசை’-ஆக வழங்கிய முன்னாள் மாணவர்கள், கிராம மக்கள்.

சென்னை:சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள்.பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை முழுவதும் நாளை 340 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்.மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.

பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு – கடிதம் அனுப்பினார் மல்லிகார்ஜூன கார்கே காஷ்மீரில் 30-ந் தேதி நடக்கும், பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் நாடுதழுவிய பாதயாத்திரையை தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக யாத்திரை பஞ்சாபை அடைந்துள்ளது.

இதுவரை 3 ஆயிரத்து 300 கி.மீ.க்கு மேல் நடைபயணம் நடந்துள்ளது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், இம்மாதம் 30-ந் தேதி யாத்திரை நிறைவடைகிறது. அதில், ராகுல்காந்தி தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். இந்தநிலையில், பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு ஒருமித்த கருத்து…

சபரிமலை: மகரஜோதி நாளில் கூட்ட நெரிசலை தவிர்க்க கடும் கட்டுப்பாடு.- பகல் 12 மணி வரை மட்டுமே நீலிமலை ஏற பக்தர்களுக்கு அனுமதி.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் வேலைவாய்ப்பு!.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

முடங்கியது விமான சேவை!தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கம். அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டன. விமான போக்குவரத்துத்துறை தலைமையகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை பாதிப்பு என தகவல். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா செல்லும், அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு புறப்படும் 700க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம், நடுவானில் பறந்து கொண்டிருகும் பல விமானங்களின் நிலை தெரியாததால் பரபரப்பு.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா – இலங்கை அணிகள் இன்று ஈடன்கார்டனில் பலப்பரீட்சைஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி.

பாண்டிச்சேரி: குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல்..அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்தக்கோரிய வழக்கு.- சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணை.

இந்தியா: வரும் 13 ஆம் தேதி முதல் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி தொடக்கம்- புவனேஸ்வரில் நடக்கும் முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா – ரஷ்யா மோதல்.

தென்கொரியாவை தொடர்ந்து ஜப்பான் மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது சீனா- கொரோனா விவகாரத்தில் சீன பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் நடவடிக்கை
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய பனிப்புயல் – 16 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் காயம்.

ஆப்கானிஸ்தான்: நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பலி – ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம்.

பிரதமர் தொடங்கி வைக்க இருந்த ரயில் மீது கல்வீச்சு! பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்த வந்தே பாரத் ரயிலின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்; சோதனை ஓட்டத்தின் போது நடந்த இந்த தாக்குதலில் 2 கண்ணாடி ஜன்னல்கள் சேதம்; சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை!

ஆந்திர மாநிலம்: விசாகப்பட்டினத்திலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு இந்த சேவை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது

கொடைக்கானல்:பழனி சாலையில் வடகவுஞ்சி அருகே உள்ள தனியார் தோட்ட பகுதிகளில் காட்டுத்தீ.

புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் தமிழிசை செளந்தரராஜன் பொங்கலிட்டு பொங்கல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

உத்தரபிரதேசம்: பரேலி – நைனிடால் நெடுஞ்சாலையில், ஒரே பைக்கில் 6 பேர் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம். மேலும் இரு வண்டிகளில் தலா நால்வர் என மொத்தம் 14 பேர் பயணம் செய்த பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் விசாரணை.

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில, மாவட்ட அளவிலான போட்டிகள் ஜூன் மாதத்துக்குள் நடத்தப்படும். அமைச்சரான பின் பேரவையில் முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக செயல்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் கேள்வி நேரத்துடன் தொடங்கியது!

விளையாட்டுத்துறை அமைச்சரான பின்னர் சட்டப்பேரவையில் முதன்முறையாக உதயநிதி ஸ்டாலின் பேச்சு; கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார்!

“பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளை உள்ளடக்கிய
‘முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளுக்கான ஆயத்தப்பணிகள் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்” – சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்.

“ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக அரிசி, சர்க்கரை, பருப்பு வழங்க நடவடிக்கை”கண் கருவிழியை பயன்படுத்தி ரேஷன் பொருட்கள் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.