புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் நெடுங்காடு தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என சுமார் 800 பயனாளிகளுக்கும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்த குடும்ப தலைவிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 1000 ரூபாய் சுமார் 450 பயனாளிகளுக்கும் வழங்கும் நிகழ்வு நெடுங்காட்டிற்கு உட்பட்ட இரண்டு இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திருமதி. சந்திர பிரியங்கா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்கள். இந்தியாவிலேயே 21 வயது முதல் 55 வயது வரை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஒரு சிறப்பு வாய்ந்த திட்டம் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். பயனாளிகளுக்கு இரண்டொரு நாட்களில் அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என விழாவில் பங்கேற்ற மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி திருமதி சத்யா அவர்கள் கூறினார்கள். மேலும் இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், துறை ஊழியர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
Leave A Comment