ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை. உச்சநீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தகவல்.

சேது சமுத்திர திட்டம்: விவாதம்

சிபிஎம் எம்.எல்.ஏ. நாகை மாலி:தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவாக இருந்த சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக பல எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம்.

எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா:தமிழருக்கு மிகப்பெரிய அளவில் உதவக்கூடிய சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது; அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சியை மனதார வரவேற்கின்றேன்.

நயினார் நாகேந்திரன்:இந்த அரசினர் தனி தீர்மானத்தின் மீது ஆதரவா இல்லையா என்று மட்டுமே பேச வேண்டும். உறுப்பினர்கள் ராமாயணத்தை பற்றி எல்லாம் பேசி வருகிறார்கள். உறுப்பினர்கள் விமர்சித்து பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின்:மதத்தையோ தெய்வத்தையோ விமர்சித்து யாரும் பேசவில்லை

நயினார் நாகேந்திரன்:சேது திட்டம் வருமேயானால் எங்களை விட மகிழ்ச்சியடைபவர்கள் யாரும் இல்லை. மண் எடுக்க எடுக்க சரிந்து கொண்டே இருக்கும். ராமர் பாலம் சேதப்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்றினால் ஆதரிக்கிறோம். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற சட்டசபையில் பாஜக ஆதரவு தரும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் கப்பல்களின் பயண நேரம் பெரும் அளவில் குறையும். தமிழ்நாடு & அண்டை மாநில துறைமுகங்களின் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கும். சிறு, சிறு துறைமுகங்களை உருவாக்க முடியும். கடல்சார் பொருள் வர்த்தகம் விரிவடையும்.