சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை – விசாரணை:
செங்கல்பட்டு : சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு. ஆணைய பதிவாளர் நேரில் விசாரணை.

காவல்துறை வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு – உத்தரவு
தமிழ்நாடு காவல்துறையினரின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணை செல்லும் – உச்சநீதிமன்றம்.

ஜனவரி 30ம் தேதி நள்ளிரவு வரை பாதுகாப்பு அமலில் இருக்கும் என அறிவிப்பு:
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவால் இனி மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை:
நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் போதே அதை திமுக எதிர்த்தது, தற்போது அந்த மசோதா நாடாளுமன்ற நிலை குழுவில் உள்ளது. மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது, புதிய மின்சார திருத்த சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு போதும் ஏற்றுகொள்ளமாட்டார்- சென்னையில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.

ஐசிஐசிஐ வங்கி-வீடியோகான் கடன் மோசடி:
ஐசிஐசிஐ வங்கி-வீடியோகான் கடன் மோசடி வழக்கில், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வீடியோகான் குழும நிறுவனர் வேணுகோபால் தூத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்!

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு:
ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று சாதிய பாகுபாடின்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசிய கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் “.

முதியவர் கொலையில் தாய், 2 மகன்கள் கைது:
திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு அருகே மறவப்பட்டியில் நேற்று இரவு ராயப்பன் (61) என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நிர்மலா பாத்திமா ராணி, இவரது மகன்கள் டேனியல் (21), வின்சென்ட் தாஸ் (23) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ₨30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவு!
கடந்த நவ.26ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணியின் மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில் நடவடிக்கை’

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி செல்போன் ஒப்படைப்பு:
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்தியதாக கூறப்படும் செல்போன் ஒப்படைப்பு விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் மாணவியின் தாயார் செல்வி ஒப்படைத்தார்.

கோவை குற்றாலம் நுழைவு சீட்டு மோசடி:
முன்னால் போளுவாம்பட்டி வனச்சரகர் சரவணனை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட வன அலுவலர் பரிந்துரை.

பயணிகளுக்கு தரமற்ற உணவு:
பயணிகளுக்கு தரமற்ற உணவு வழங்கிய விக்கிரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல தடை -போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.பயணிகளிடமிருந்து பெற்ற புகாரின் பேரில், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை.

முட்டையின் விலை சரிவு:
கடந்த 12 நாட்களாக உயர்ந்துகொண்டே சென்ற முட்டையின் விலை இன்று 20 காசுகள் சரிவு.நாமக்கல் பண்ணைக் கொள்முதல் விலை ₹5.45 ஆக நிர்ணயம்; நாளை முதல் புதிய விலை அமலுக்கு வரும்.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படங்கள் வெளியீடு:
ஜனவரி 31, 2023 அன்று புதிய பாராளுமன்றத்தில் இருந்து கூட்டு அமர்வில் மாண்புமிகு ஜனாதிபதி உரையாற்றுவார். பிப்ரவரி 1, 2023 அன்று நிதி அமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் இன்று நடத்திய அதிரடி சோதனையில், கள்ளத்தனமாக விற்பனை செய்த 657 மது பாட்டில்கள் பறிமுதல். 1.70 லட்சம் ரொக்கம், 3 இருசக்கர வாகனங்கள், 2 பேமண்ட் மிஷின் பறிமுதல்; 9 பேர் கைது.

குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு விவகாரம்:
புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல்.

34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டிஸ்!
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வாரிசு, துணிவு திரைப்படங்களை ஜனவரி 11,12,13,18 ஆகிய தேதிகளில் நள்ளிரவு காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்டதாக கூறி 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டிஸ்!

திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அட்சியர் எச்சரிக்கை15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால் திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அட்சியர் எச்சரிக்கை.