தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் இன்று (17.06.2023) திருவைகுண்டம் சார்பு நீதிமன்றத்தினை மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திருமதி. V.பவானி சுப்பராயன் அவர்கள், மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திரு. S.S. சுந்தர் அவர்கள், மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திரு.A.D.ஜெகதீஸ் சந்திரா அவர்கள், மாண்பமை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் திரு. G.இளங்கோவன் அவர்கள் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்கள். உடன் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திரு. M.செல்வம் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜி சரவணன் அவர்கள், தலைமை குற்றவியல் நடுவர் திரு.R.செல்வக்குமார் அவர்கள், திருவைகுண்டம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு.S.ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் உள்ளனர்.

________________________________________________________________________________

நாகையிலேயே சுமார் 18 உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆதமங்கலம் ஸ்ரீ ஆதி வியாதி ஹர விஷ்வ ரூப ஆஞ்சநேயருக்கு மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள ஆதமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த குட்டியப்ப ஐய்யனார் கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் புதிதாக 18.3/4 அடி உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ ஆதி வியாதி ஹர விஷ்வ ரூப ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நாகை மாவட்டத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேக விழா முதல் கால யாக பூஜையுடன் நேற்று துவங்கியது. அதன் தொடர்ச்சியாக கணபதி ஹோமம்,மகாலட்சுமி ஹோமம், ஆஞ்சநேயர் மூல மந்திர ஹோமம் மற்றும் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகா பூர்ணாஹூதிக்கு பின்னர் சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி மூன்று முறை ஆலயத்தை சுற்றி வலம் வந்தது.பின்னர் வேத மந்திரங்கள் முழங்க விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு புனித நீர் ஊட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாகை மாவட்டத்திலேயே மிகவும் பிரம்மாண்டமாக சுமார் 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்ட முதல் கோயில் இக்கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

________________________________________________________________________________

தமிழ்வளர்த்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரை தாங்கி நிற்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக எல்லைக்கு உட்பட்ட கல்லூரிகளில் 3 ஆண்டுகளாக பட்டம் வழங்கப்படவில்லை, ஆளுநர் அவர்கள் இக்கல்லூரியில் படித்தவர்களுக்கு விரைவில் பட்டம் வழங்க வேண்டும் என தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பேட்டி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறுகையில் , தமிழ்வளர்த்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரை தாங்கி நிற்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக எல்லைக்கு உட்பட்ட கல்லூரிகளில் 3 ஆண்டுகளாக பட்டம் வழங்கப்படவில்லை, ஆளுநர் அவர்கள் இக்கல்லூரியில் படித்தவர்களுக்கு விரைவில் பட்டம் வழங்க வேண்டும் . இது நியாயமா ? எங்கள் மக்களுக்கு இப்படி செய்கிறீர்களே? படித்த சான்று இல்லமால் எங்கள் மக்களுக்கு வெளிநாடு போக முடியவில்லை, மேல்படிப்பிற்கு போக முடியவில்லை அதனால குடுங்கய்யா என்று ஆளுநரிடம் கேட்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையால் தமிழகம் 200 ஆண்டுகள் பின் தங்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.