சென்னை: கேஸ் வெல்டிங் கட்டர் இயந்திரம் விற்பனை செய்யும் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேஸ் வெல்டிங் கட்டர் செய்யும் இயந்திரத்தை யாருக்கு எல்லாம் விற்றனர்? வாடகைக்கு விற்றனர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெரம்பூர் நகைக்கடை ஷட்டரை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது பற்றி விசாரணை நத்தப்பட்டு வருகிறது.
சென்னை: மோசடி வழக்கில் ஐஎஃப்எஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி ரூ.56.82 கோடி மோசடி செய்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் அருகே அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த ரவுடி ராஜ்குமார் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 பேர் கொண்ட கும்பலால் புளியன்விளை பகுதியில் ரவுடி ராஜ்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை: அன்பு ஜோதி இல்ல வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அமித்ஷாவுக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். அன்பு ஜோதி இல்லத்தில் இருந்தவர்கள் உடலுறுப்புக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது என அண்ணாமலை கூறியுள்ளார். வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்ட நிலையில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி: டெல்லியில் 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது. 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார். கூட்டத்தில் பான்மசாலா, குட்கா, ஆன்லைன் விளையாட்டு, கேசினோக்கான ஜிஎஸ்டி பற்றி விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: வேலூர் மாவட்டத்தில் கட்டப்பட உள்ள மினி டைடல் பூங்கா கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் பரப்பளவில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்கா அமைய உள்ளது. தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் புதிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன.
சென்னை: கர்நாடக வனத்துறையினருக்கு தண்டணை பெற்று தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மீனவர் ராஜா இறப்புக்கு காரணமான கர்நாடக வனத்துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை தேவை எனவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: கர்நாடக வனத்துறையால் தமிழ்நாடு மீனவர் ராஜா கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கர்நாடக வனத்துறையினர் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும் எனவும் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர். 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு வந்துள்ளார்.
தென்காசி: ஆலங்குளம் அருகே கிணற்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் வெடிக்காமல் இருக்கும் வெடிகளை செயலிழக்க வைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கிணற்றில் வெடிக்காமல் இருக்கும் வெடிகளை செயலிழக்க வைக்க வல்லுநர் குழு 3ம் நாளாக ஆய்வு செய்து வருகிறது. புதுப்பட்டி கிராமத்தில் கிணறு தோண்டும் பணியின்போது வெடி விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர்.
கோவை: கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தம்பதி மீது ரயில் மோதி உயிரிழந்தனர். ரயில் மோதியதில் மணிகண்டன் (44), அவரது மனைவி லதா (40) ஆகியோர் உயிரிழந்தனர்.
டெல்லி: 2-ம் நாளான இன்று முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரோகித் சர்மா 32, ராகுல் 17, புஜாரா 0, ஸ்ரேயாஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 88 ரன்களை சேர்த்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.
சென்னை: பல மாநிலங்கள் சென்று விசாரிக்க வேண்டியுள்ளதால் அன்புஜோதி இல்லம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார். அன்புஜோதி இல்லத்தில் இருந்து ஜபருல்லா (70) என்பவர் உட்பட 15 பேர் காணாமல் போனது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொல்கத்தா பெண்ணை அடைத்து வைத்து நிர்வாகி ஜீபின் பாலியல் வன்கொடுமை செய்தது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
நாகை: சொகுசு காரில் கணவருடன் சாராயம் கடத்தி வந்த பெண் காவலர் உள்பட 6 பேர் அக்கரைப்பேட்டையில் கைது செய்யப்பட்டனர். கடற்கரை சாலையில் சாராயம், மதுபாட்டில்களை வேறு வாகனங்களுக்கு மாற்றும்போது 6 பேரும் சிக்கினர். கொரடாச்சேரியில் பணிசெய்யும் காவலர் ரூபினி கைதான நிலையில் 110லி சாராயம், 336 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர்: நொய்யல் அருகே நாச்சிமுத்து என்பவர் தோட்டத்தில் ஆட்டை கொன்றது சிறுத்தை தான் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் சோதனையில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரோன்கள் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு நடந்து வருவதாக மாவட்ட வன அலுவலர் சரவணன் கூறியுள்ளார்.
டெல்லி: ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி, வில்-அம்பு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என உத்தரவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக உத்தரவ் அறிவித்துள்ளார். மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற பாஜக எதை வேண்டுமானாலும் செய்யும் எனவும் தேர்தல் ஆணையத்தின் முடிவு அப்பட்டமான ஜனநாயக படுகொலை எனவும் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
டெல்லி: ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என சிவ சேனா, ஏக்நாத் ஷிண்டே வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆட்சி அமைக்கப்படும்போது, பெரும்பான்மையை நிரூபிக்கக் கோருவது மட்டும்தான் ஒரு ஆளுநரின் பணி. ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது. அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் குறித்து ஆளுநர் பேச வேண்டிய தேவை என்ன இருக்கிறது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
திண்டுக்கல்: கோட்டை மாரியம்மன் கோவிலில் பூத்தேர் ஊர்வலம் கோலாகலம். முக்கிய வீதிகள் வழியாக பூத்தேரில் பவனி வந்த மாரியம்மனை தரிசனம் செய்த பக்தர்கள். வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் அம்மன் மீது மலர்தூவி வழிபாடு.
அவிநாசி: மங்கலம்சாலையில் குடிநீர் திட்டக் குழாய் உடைந்து பீறிட்டு வெளியேறிய தண்ணீர்தண்ணீரின் அழுத்தம் காரணமாக ராட்சதக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணான குடிநீர். பீறிட்டு வெளியேறிய தண்ணீரால் குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.
வேலூர் சத்துவாச்சாரி: ஆவின் பால் பண்ணையில் இருந்து கடந்த 12ம் தேதி தயிர், மோர் முகவர்களுக்கு விநியோகிப்பதில் அலட்சியம்; துணை மேலாளர் உமா மகேஸ்வரராவை சஸ்பெண்ட் செய்து பொது மேலாளர் உத்தரவு.
தஞ்சாவூர்: 30 ஆண்டுகளுக்கு முன் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்பப்பெறும் வகையில், பட்டுக்கோட்டை நகராட்சி நிறைவேற்றிய தீர்மானம் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்.
கேரளா: மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரத்தில் தென்காசியில் 9 வழக்குகள் பதிவு. தமிழகத்தில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – நீதிபதிகள்.
பாகிஸ்தான்: கராச்சியில் அமைந்துள்ள காவல்துறையின் தலைமை அலுவலகத்தின் மீது ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 8-10 பயங்கரவாதிகள் போலீஸ் அலுவலகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாக தகவல்.
நெல்லை – மேட்டுப்பாளையம்: வாராந்திர சிறப்பு ரயில் தென்காசி, ராஜபாளையம், மதுரை, பொள்ளாச்சி வழியாக இயக்கம். ஏப்ரல் 6 – ஜூன் 29 வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரயில், மாலை 7 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.
சென்னை: மேற்கு மாம்பலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பத்மாவதி (62) வீட்டில் 40 சவரன் நகை திருட்டு; கொள்ளை தொடர்பாக அசோக் நகர் போலீசார் விசாரணை! பத்மாவதி தனியாக இருந்தபோது, பிளம்பிங் மற்றும் கதவுகளைச் சரிசெய்ய வந்ததுபோல் நடித்து திருடியதாகத் தகவல்!
Leave A Comment