செய்யாறு: அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழக இணையதள குளறுபடியால் மீண்டும் மீண்டும் தேர்வு மற்றும் மறுமதிப்பீடுக்கு பணம் செலுத்தி ஏமாறுவதாக கூறி சாலைமறியல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 8,000 த்துக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் இணையதள குளறுபடியால் மீண்டும் மீண்டும் தேர்வு மற்றும் மறுமதிப்பீடு கண்டனத்திற்கு பணம் செலுத்தி ஏமாறுவதாக கூறி செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி வாயில் முன்பு உள்ள செய்யாறு- ஆற்காடு சாலையில் தீடிர் சாலைமறியல் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கல்லூரி மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்பதாக எகூறியதை தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கல்லூரி வளாகத்திற்கு திரும்பி சென்றனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக இணையதளம் முழுமையாக இயங்கவில்லை. மாணவர்களின் கல்வி விவரங்களை புதுப்பிக்கவில்லை மறுபடியும் மறுபடியும் பணம் செலுத்த கோரி மாணவர்களுக்கு அறிவுறுத்தபடுகிறது. இதனால் மாணவர்கள் தங்கள் தேர்வு விவரங்களை முழுமையாகப் வெளியிடாமல் இணைய தளம் இயங்கி வருவதால், மாணவர்களின் பணம் வீணாவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே ஆண்டு தேர்வில் எத்தனை பாடத்தில் தேர்ச்சி எத்தனை பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என இதுவரை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அப்டேட் செய்யவில்லை எனவும் கல்லூரி தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களின் விவரங்களை அப்டேட் செய்தால்தான் அதற்கேற்ப பணம் செலுத்த முடியும் என இது குறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரி மாணவர்கள் பயன் பெற வசதியாக இருக்கும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.