Cinema

சூர்யாவை தூக்கக் காத்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்!!

Rate this post

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கடைசியாக தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் அவர் சியான் விக்ரம் நடித்த துருவநட்சத்திரம் படப்பிடிப்பை முடித்துள்ளார். மேலும் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலை நிறைவுக்காக காத்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் , கௌதம் மேனன் சூரியாவுடன் எப்போது மீண்டும் பணியாற்றுவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. சமீபத்தில், கௌதம் ஒரு நேர்காணலில் லண்டனில் கமல் மற்றும் கமலினி ஆகிய இரு இசைக்கலைஞர்களைப் பற்றிய ஒரு காதல் கதை இருப்பதாகவும் கூறினார்.

சூர்யா தனது 20 வது ஆண்டு திரையுலக அனுபவத்தில் கௌதமை வாழ்த்தியதாகவும், கௌதம் சொன்னால் மீண்டும் கிட்டார் (Guitar) தூக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். நேற்று இன்ஸ்டாகிராமில், மீண்டும் கிட்டார் (Guitar) தூக்குவேன் என்று சொல்வது சூர்யாவுக்கு இனிமையானது என்று கூறிய கௌதம், இன்னும் 10 நாட்களில் சூர்யாவிடம் கதையை விவரிக்கப் போவதாகவும், சூரியாவுக்கு பிடித்திருந்தால் சூரியாவை தூக்குவதாகவும் கூறியுள்ளார்.

Comment here