திருவள்ளூர்: அடுத்த பெரியபாளையம் பகுதியில் தனியார் விடுதியில் இரும்பு கேட் சரிந்து விழுந்ததில் நித்தீஷ் (10) என்ற சிறுவன் உயிரிழப்பு.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த நித்தீஷ் குடும்பத்தினர், வேண்டுதலுக்காக பெரியபாளையம் கோயிலுக்கு வந்து விடுதியில் தங்கியிருந்த போது சோகம்.
நீலகிரி: ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சலால் பன்றிகள் இறந்ததை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் பன்றி கறி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் நோய் கட்டுப்படுத்தப்படும் வரை நீலகிரி மாவட்டத்தில் பன்றிக் கறியை விற்க கூடாது. ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு நீலகிரியில் இதுவரை 30-க்கும் மேறபட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளன.
சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 315 கன அடியாக உள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2996 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 831 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மி.கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் நீர் இருப்பு 482 மி.கன அடியாக உள்ளது.
சென்னை: பசுமை திட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக வங்கிகள் விவசாயிகளுக்கு மரக்கன்று வாங்க கடன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 20 முதல் 25 ஆண்டுகள் வரை வளரும் மரங்களை விவசாயிகள் வளர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. பயிர்களை நடும் விவசாயிகளை ஊக்குவிப்பது போல விவசாய நிலங்களில் மரக்கன்றை நடுவோரை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வேலூர்: வேலூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பனிப்பொழிவால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் வழக்கத்தை விட இன்று காலை பனியால் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் பலர் தவித்தனர். காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு 8 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.
அரக்கோணம்: ரயில் நிலையம் அருகே தண்டவாள விரிசல் காரணமாக ரயிகள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. தண்டவாள விரிசலால் அரக்கோணம்- சென்னை செல்லக்கூடிய ரயிகள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தீவுத்திடல் அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இலவச வேட்டி, சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ரூ.1000-யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை: 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.42,080க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.5,260க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.74.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: 2023-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதில், சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசத் தொடங்கினார். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறினார்.
சென்னை: சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தது. ஆளுநர் ரவியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தது. தமிழ்நாடு..தமிழ்நாடு என முழக்கமிட்டவாறே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை: மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை காக்க நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழ்நாடு அரசு என சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், மீனவர்களுக்கு முன்னுரிமை அளித்து தமிழ்நாடு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.சென்னை: நீட் தேர்வு மாநில உரிமையை பறிக்கும் வகையிலும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது என பேரவையில் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. நீட் விலக்கு சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது எனவும் ஆளுநர் தகவல் தெரிவித்தார்.
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பெரியார் நினைவு சமத்துவபுர திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
Leave A Comment