நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருபவர்களை தமிழக அரசு தடுக்க வேண்டும் போரூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வியாபாரிகள் சங்க தலைமை ஒருங்கினைப்பாளர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை போரூர் மின்சார வாரியத்தில் இருந்து கோவூர் வரை நடைபாதையை ஆக்கிரமித்து கொண்டு காய்கறிகள்,பழ வகைகள் போன்றவற்றை சிலர் வியாபரம் செய்து வருகின்றனர்,

இதனால் வாடகைக்கு கடைகள் எடுத்து முதலீடு செய்து ,வரிசெலுத்தி வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கபடுகின்றனர்,

நடைபாதை வியாபாரிகளை கண்டித்து தமிழ்னாடு வியாபாரிகள் சங்கம் சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கடை வியாபாரிகள் கைகளில் வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நடைபாதை வியாபாரகளை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

தகவல் அறிந்து வந்த போரூர் ,மாங்காடு மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளரகள் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்,

பின்னர் பேசிய அருண்குமார்,
இது போன்று நடைபேதையில் பாதி விளைக்கு விற்கபடும் பொருட்களால் கடை வாடகை கொடுத்து முதலீடு செய்து வரும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கபடுவதாகவும்,

கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்னர் நடைபாதைகள் ஆக்கிரமித்து கடைகள் வைக்கபட்டது குறித்து தான் மனு கொடுத்த பிறகும் மீண்டும் அப்பகுதியில் நடைபாடை கடைகள் அதிகரித்து உள்ளதாகவும்,

நடைபாதையில் வியாபாரம் செய்பவர்கள் தனியிடம் ஒதுக்கவேண்டும் என்றும் இது போன்று கடை வியாபாரிகள் பாதிக்கபடும் வகையில் செயல்படும் நடைபாதை வியாபாரிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.