Tamilnadu

காந்தியின் கிராம முன்னேற்ற கொள்கையின் மறுவடிவம்தான் இந்த பல்கலைகழகம் – பிரதமர் மோடி

Rate this post

Tamil news online பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளார். மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, எடப்பாடி பழனிசாமி, பன்னீர் ஆகியோர் வரவேற்றனர்

விழா மேடையில் காந்தி குல்லா அணிந்து முதல்வர் ஸ்டாலின் அமர்ந்துள்ளார்.
கவர்னர், பிரதமர் மற்றும் அனைத்து பிரமுகர்கள் மாணவர்களும் காந்தி குல்லா அணிந்துள்ளனர்.

முதல் தர மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் மற்றும் பட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார்.

காந்தியின் கிராம முன்னேற்ற கொள்கையின் மறுவடிவம்தான் இந்த பல்கலைகழகம் என்றார் பிரதமர்.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார்.
அப்போது அரங்கமே கை ஒலியால் அதிர்ந்தது.

கடந்த 8 ஆண்டுகளில் காதி- கதர் கிராம தொழில் 300 சதவிதம் உயர்ந்துள்ளது.
கிராம தன்னிறைவு என்ற காந்தியின் கனவு நிறைவேறியுள்ளது.

கிராம சாலைகள் நகர சாலைகளாக மாற்றப்படுகிறது..
கிராமங்கள் மின்மயமாக்கப்படுகிறது என்று பிரதமர் பெருமிதப்பட்டார்.

Online news

 

Latest breaking news in tamil

பத்ம விபூஷன், பத்மபூஷன் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், மிருதங்க சக்கரவர்த்தி பத்ம விபூஷன் உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமன் அவர்களுக்கும் கவுரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி வழங்கினார்.

Online tamil news

பிரதமர் உரை

மிகவும் முக்கியமான காலத்தில் நீங்கள் பட்டம் பெறுகிறீர்கள்.

காந்தியின் கனவுகளுக்கு சவால் நிறைந்த காலம் இது.

தென்னிந்திய மொழிகளை அனைவரும் கற்க வேண்டும், அதிலும் தமிழை கற்க வேண்டும் என சொன்னவர் காந்தி

காந்தியை நீண்ட காலமாக மறந்துவிட்டார்கள்.

கடந்த 8 ஆண்டுகளில் காதி விற்பனை 300 சதவீதம் அதிகரித்துள்ளது.

கதர் என்பது சர்வதேச ஆடையாக மாறிவிட்டது.

கிராமத்தின் ஆன்மா.. நகரத்தின் வளர்ச்சி (தமிழில் கூறினார் பிரதமர்)

கிராம உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுயசார்பு பாரதம் திட்டத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

சுதேசி இயக்கத்தின் மையப் புள்ளி தமிழ்நாடு.

தேச நலன் விவகாரத்தில் தமிழகம் எப்போதும் முதலிடத்தில் உள்ளது.

கிராமங்களில் இயற்கை விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

இயற்கை விவசாயம் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சூரிய மின்சக்தி உற்பத்தி மூலம் கிராமங்களும் தன்னிறைவு பெற முடியும்.

கிராம பெண்களின் வெற்றி, தேசத்தின் வெற்றி

– பிரதமர் மோடி

Comment here