சென்னை: துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை கோரி படத்தயாரிப்பு நிறுவனங்கள் தொடரப்பட்ட வழக்கில் வாரிசு படத்தை வெளியிட 4,548 இணையதள பக்கங்களுக்கும், துணிவு படத்தை வெளியிட 2,754 இணைய பக்கங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை: வரும் 13, 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் வாரிசு, துணிவு படங்களுக்கு காலை 4 மற்றும் 5 மணிக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

நெல்லை: நெல்லையில் வாரிசு, துணிவு திரைப்பட கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் கூடாது. பொதுமக்களை இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கபப்டும். அரசின் சட்ட திட்ட விதிகளை பின்பற்றி நடந்து கொள்ள விஜய், அஜித் ரசிகர்களுக்கு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

வேலூர்: காகிதப்பட்டறையில் அஜித் ரசிகர் மன்ற அலுவலகத்தில் துணிவு 900 முன்பதிவு டிக்கெட்டுகள் திருட்டு செய்யப்பட்டது. விற்பனைசெய்யப்பட்ட டிக்கெட்களுக்கான பணம் சுமார் ரூ. 16,000 திருடுபட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் நடிகர் அஜித் கட்டவுட்டுக்கு ₹7.5 லட்சம் மதிப்புள்ள பிரமாண்ட மாலையை அணிவித்து அசத்திய ரசிகர்கள்.

துணிவு கொண்டாட்டம்: சென்னையில் லாரி மீது ஏறி டான்ஸ் ஆடிய அஜித் ரசிகர் தவறி விழுந்து பலி:

அஜித் நடிப்பில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உலகம் முழுவதும் ‘துணிவு’ படம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் முதல் காட்சியாக நள்ளிரவு 1 மணிக்கு தியேட்டர்களில் துணிவு திரைப்படம் வெளியாகியுள்ளது. துணிவு திரைப்படம் தியேட்டர்களில் வெளியான நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கு முன்பு துணிவு கொண்டாட்டத்தின் போது சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய போது எதிர்பாரத விதமாக அஜித் ரசிகர் தவறி ரோட்டில் விழுந்தார். இதனால் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த அஜித் ரசிகர் பரத்குமார் (வயது 19) சிந்தாதிரிபேட்டையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

தென்காசி: PSS திரையரங்கில் இரவு ஒரு மணிக்கு துணிவு திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு இருந்த நிலையில் தற்போது ஒரு மணி காட்சி ரத்து செய்யப்பட உள்ளதாக போலீசார் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்டோர் திரையரங்கள் முன் உள்ளனர் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

தென்காசி: தென்காசிமாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா திரையரங்கில், நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தின் 1 மணி காட்சி ரத்து என தகவல்; முதல் காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சென்னை: துணிவு படம் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழப்பு.ரோகினி திரையரங்கு முன்பு சாலையில் சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடிய போது கீழே விழுந்து உயிரிழப்பு.