politics

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் கால அட்டவணை

Rate this post

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் கால அட்டவணை

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று காலை 09.45 மணி முதல் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்.

(1) பந்தர் கார்டன் பள்ளியில் புதியதாக கட்டப்படவுள்ள கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

(2) தீட்டி தோட்டம் முதல் தெருவில் புதியதாக கட்டப்பட்டுள்ள பூப்பந்து விளையாட்டு திடலை திறந்து வைக்கிறார்.

(3) தீட்டி தோட்டம் முதல் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ள 33 பணிகளை தொடங்கி வைக்கிறார்.

(4) பள்ளி சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளை தொடங்கி வைக்கிறார்.

(5) வீனஸ் நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மாணவர் விடுதியினை திறந்து வைக்கிறார்.

(6) வீனஸ் நகரில் பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் புதியதாக கட்டப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தினை திறந்து வைக்கிறார்.

குறிப்பு:

மேற்கண்ட நிகழ்ச்சி செய்தி தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான Live Video Out சென்னை தலைமைச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

– இணை இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை.

Comment here