சென்னை : ‘ரேஷன் கார்டுதாரர்களிடம் எக்காரணத்தை முன்னிட்டும், ‘ஆதார்’ எண் கேட்கக் கூடாது’ என, அதிகாரிகளை அறிவுறுத்துமாறு, மாவட்டகலெக்டர்களுக்கு உணவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு, குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்ததிட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்னோட்டமாக, 2023 பொங்கல் பரிசில் இடம்பெற உள்ள பணமும், வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, ஆதார் எண் அடிப்படையில், உணவு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மொத்தம் உள்ள 2.23 கோடி அரிசி கார்டுதாரர்களில், 14.84 லட்சம் பேருக்கு, வங்கி கணக்குகள் இல்லாத விபரங்களை கண்டறிந்துள்ளனர்.

அவர்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், சேமிப்பு கணக்கை துவக்க நடவடிக்கை எடுக்குமாறு, கூட்டுறவு அதிகாரிகளுக்கு, உணவு வழங்கல் துறை சமீபத்தில் உத்தரவிட்டது.

இதற்காக வங்கி கணக்கு இல்லாதவர்களின் பட்டியல், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமின்றி, பட்டியலில் இல்லாதவர்களையும் தொடர்பு கொள்ளும் ரேஷன் ஊழியர்கள், வங்கி கணக்கு துவக்க அறிவுறுத்துவதோடு இல்லாமல், ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களை கேட்கின்றனர்.

இது, கார்டுதாரர்களிடம்தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கார்டுதாரர்களிடம் எக்காரணத்தை முன்னிட்டும், ஆதார் எண் கேட்க கூடாது என, கடை ஊழியர்களை அறிவுறுத்துமாறு, மாவட்ட கலெக்டர்களுக்கு, உணவு துறைஉத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, உணவு வழங்கல் துறை ஆணையர்ராஜாராமன், கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ளசுற்றறிக்கை:
வங்கி கணக்கு இல்லாதநபர்கள், அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை, ரேஷன் கடையில் பெற்றுக்கொள்ளலாம்.

கார்டுதாரர்களுக்கு ஏற்கனவே கணக்கு உள்ளது என்றால், அந்த வங்கிக்கு சென்று, அவர்களின் ஆதாரை இணைக்கஅறிவுறுத்த வேண்டும்.

இல்லையெனில்,அருகில் உள்ள கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசிய வங்கியிலோ புதிய கணக்கு துவக்க வேண்டும். அதை ஆதார் எண் உடன் இணைத்து, அந்த விபரத்தை அவர்களது ரேஷன் கடையில் தெரிவிக்கஅறிவுறுத்த வேண்டும்.

மேலும், கார்டுதாரர்களின் ஆதார் எண் விபரங்களை, எக்காரணத்தை முன்னிட்டும் கேட்கவோ மற்றும் ஆதார் அட்டை நகலை பெறவோ கூடாது என, சார்நிலை அதிகாரிகளை அறிவுறுத்தவேண்டும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

எல்லாமே இனி வங்கியில்!ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு மட்டுமின்றி, மழை, ஊரடங்கு போன்ற பேரிடர் காலங்களில் ரொக்க பணம் வழங்கப்படுகிறது. இனி, அனைத்து வகை நிதி உதவிகளும் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.இதற்காகவே, வங்கி கணக்கு இல்லாதகார்டுதாரர்களிடம், கணக்கு துவக்கும் பணி துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.