India

இன்றைய செய்தி – சிறப்பம்சங்கள்

Rate this post

Online tamil news

பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி வேலுமணி உட்பட 7 பேரை மாற்ற கொலிஜியம் பரிந்துரை

பரிந்துரைத்த 24 மணி நேரத்தில் தேர்தல் ஆணையர் நியமனம் எப்படி? – ஒன்றிய அரசுக்கு நீதிபதி கேள்வி

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற கர்நாடக அரசு முடிவு

கொள்கையை காப்பாற்ற எதையும் செய்யலாம், எதையும் இழக்கலாம் என உறுதியாக உள்ளேன் – முதல்வர்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக விளக்கம் கோரி அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை நாளை ஆஜர்படுத்த ஐகோர்ட் ஆணை

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை நவ.29-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

காங்கிரஸில் இருந்து ரூபி மனோகரனை தற்காலிகமாக நீக்கியது கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு

தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் – ஐகோர்ட் மதுரை கிளை

தனியார் பள்ளியில் அரசியல், மதம், சாதி சார்ந்த நிகழ்ச்சிக்கு மெட்ரிக். பள்ளிகள் இயக்ககம் தடை

நம்ம ஊரு சூப்பரு இயக்க விழிப்புணர்வு பேனர் அச்சடித்ததில் முறைகேடு இல்லை – தமிழக அரசு

காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட கமல் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் – தனியார் மருத்துவமனை

அதிமுக ஆட்சியில் சிமெண்ட் நிறுவனத்தில் முறைகேடு; ஊழல் கண்காணிப்பு துறை பதில் தர ஐகோர்ட் ஆணை

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் 190 பேருக்கு ₹4.85 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு: “இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில்” அமைப்பு பொறுப்பேற்பு

உலகக்கோப்பை கால்பந்து: கேமரூன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சுவிட்சர்லாந்து அணி

2001-02 கல்வியாண்டு முதல் அரியர் உள்ள பொறியியல் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு

பி.எஃப். திட்டத்தில் சேருவதற்கான அதிகபட்ச ஊதிய வரம்பு ₹15,000-லிருந்து ₹21,000ஆக உயர வாய்ப்பு

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

சிறார் குற்ற வழக்குகளில் வரைமுறையின்றி கைது – போலீஸ் நடவடிக்கை குறித்து ஐகோர்ட் அதிருப்தி

ரூபாய் நோட்டு புழக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரம் ஆர்.பி.ஐ.க்கே உள்ளது – ப.சி.

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் ₹4 கோடி மோசடி; கப்பல் மேலாண் மேலாளருக்கு 3 ஆண்டு சிறை

நாட்டில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் ஜூலை – செப்டம்பர் காலாண்டில் 7.2%ஆக சரிவு – ஒன்றிய அரசு

ஒன்றிய அரசின் பணமதிப்பு ரத்தால் நாட்டின் பொருளாதாரம் முடங்கிவிட்டது – ப.சிதம்பரம்

10 எம்எல்ஏக்கள் ஆதரவுகூட இல்லாத சச்சின் பைலட்டுக்கு தலைமை பொறுப்பு தர முடியாது-கெலாட்

டெல்லி ஜாமா மசூதிக்குள் பெண்கள் தனியாகவும் குழுவாகவும் நுழைய தடை விதிப்பு

அதிமுக ஆட்சியில் காவிரி-குண்டாறு திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது – செல்வப்பெருந்தகை

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்

நவ. 2021-ல் சந்தைக்கு வந்த Paytm பங்கு ஒரே ஆண்டில் 79% விலை சரிந்து முதலீட்டாளருக்கு இழப்பு

அயலகத் தமிழர் தின விழா கொண்டாடுதல் தொடர்பாக துணைக் குழுக்கள் அமைத்து அரசாணை வெளியீடு

கஞ்சிக்கோடு-வாளையாறு வழித்தடத்தில் இரவில் ரயிலை 30 கி.மீ. வேகத்தில் இயக்க ஐகோர்ட் ஆணை

ரயில்வே துறையில் முறைகேடு, ஊழலில் ஈடுபட்ட 177 பேரை பணி நீக்கம் செய்துள்ளது ரயில்வே

நீலகிரி, முதுமலையில் அந்நிய மரத்தை அகற்றாவிடில் அவமதிப்பு; வனத்துறைக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னையில் பாமாயில், பருப்பு சார்ந்த தொழிற்சாலை உட்பட 40 இடங்களில் 2-வது நாளாக ஐ.டி. ரெய்டு

இந்தியா – நியூசிலாந்து இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு: விசாரணைக்காக மங்களூரு சென்றுள்ளார் ஆசிரியர் சுரேந்தர்

திருவண்ணாமலை தீபத்திருவிழா: 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது போக்குவரத்துத் துறை

உடல்நலக்குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் சமந்தா அனுமதி என பரவிய தகவல் வதந்தி

நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி தொழிலதிபர் நீரவ் மோடி மனு

கன்னியாகுமரி ரயில் நிலையத்தை ₹49.36 கோடியில் மேம்படுத்த ரயில்வே துறை அனுமதி

போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் உண்டு – அரசாணை வெளியீடு

புதுகை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை மீண்டும் அங்கேயே இயங்கும் – மா.சு.

சீர்காழி, தரங்கம்பாடியில் மழை பாதித்தோருக்கு ₹1,000 நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது

தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு கன்னட தேசிய கவி குவேம்பு இலக்கிய விருது அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்தனர்

உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள் உறுதி

திருவாரூர்: கஜா புயலால் நெல் மூட்டைகள் சேதம்; 4 விவசாயிகளுக்கு ₹7 லட்சம் தர கோர்ட் ஆணை

கலைஞர், முதலமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: ராஜேந்திர பாலாஜி மீது மணப்பாறை போலீசில் புகார்

டெல்டாவை புறக்கணிக்கும் ரயில்வேயை கண்டித்து நவ.28 முதல் ரயில் மறியல் – செல்வராசு எம்.பி.

சென்னை மாநகராட்சி 165-வது வார்டு காங். கவுன்சிலர் ஈஸ்வரபிரசாத் மரணம் – முதல்வர் இரங்கல்

மஞ்சள் பையை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கலாம் – நீதிபதி மகாதேவன்

தமிழ்நாட்டில் இவ்வாண்டு 13 பொறியியல் கல்லூரிகளில் 100% மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து டிச.2-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை

மதவாத சக்திகளுக்கு தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள் – துரை வைகோ

50 ஜிபி இலவச டேட்டா என செல்போனுக்கு வரும் இணைப்பை கிளிக் செய்யாதீர் – சைபர் கிரைம் போலீஸ்

விழுப்புரம் – செஞ்சி சாலையில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துக்கு ₹25,000 அபராதம்

குமரி: கோயில் ஊழியர்கள் மீது சிபிஐ வழக்கு உள்ளபோது பணியில் தொடர்வது எப்படி? – நீதிபதிகள்

போலீசுக்கு எதிர்ப்பு: திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே சாலையோர வியாபாரிகள் போராட்டம்

சேலத்தில் நவ.26-ல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

கும்பகோணம் மவுனசாமி மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 சிலைகள், ஒரு ஓவியம் மீட்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து உயர்வு

இந்தியாவுக்கு எதிரான ஹாக்கி தொடரில் ஆஸி. அணியில் பங்கேற்கும் வீரர்கள் அறிவிப்பு

5 அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை வசதி கோரி மனு-மருத்துவ செயலர் பதில் தர ஆணை

திருவாரூர்: தர்கா பெரிய கந்தூரி கொடியேற்றம், சந்தனக்கூடு விழா – நாளை, டிச.4-ல் டாஸ்மாக் மூடல்

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

உதகை: சாதி சான்று கோரி 200 பழங்குடியின மாணவர்கள் பள்ளி, கல்லூரியை புறக்கணித்து போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: 2020-ல் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, அண்ணனுக்கு ஆயுள்

தமிழ்நாட்டில் 3,746 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன

திருப்பத்தூர் பாஜக நகர துணை தலைவர் கலி கண்ணன் ஊத்தங்கரையில் கொலை – போலீஸ் குவிப்பு

உணவுக்காக ஆமை கொலை? – தூத்துக்குடி துறைமுக கடற்கரை அருகே அதிகாரிகள் விசாரணை

சென்னை: கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி மோசடி செய்தவர் கைது

கொலை மிரட்டல்: குமரி இரணியல் பேரூராட்சி 4-வது வார்டு பாஜக கவுன்சிலர் கிரிஜா மீது வழக்கு

மதுரை திருப்பாலையில் கணவர் செந்தில்குமாரை கொல்ல முயன்ற மனைவி, ஆண் நண்பருடன் கைது

கரூரில் குவாரிக்கு எதிராக போராடிய ஜெகநாதன் கொலை – மேலும் ஒருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

ஊத்தங்கரை அருகே திருப்பத்தூர் நகர பாஜக துணைத்தலைவர் கலி கண்ணன் வெட்டிக் கொலை

மோசடி மன்னன் வில்லிவாக்கம் முத்துவேலுக்கு உடந்தை – பெண் காவலர் அஜ்மோல் சஸ்பெண்ட்

திருப்பத்தூர்: மனைவி உடலை புதைக்க தோண்டிய குழியில் இறங்கி கணவன் பூஜை செய்ததால் பரபரப்பு

சென்னையில் ஓடும் பேருந்தில் கைவரிசை – ஆந்திராவை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கைது

எழும்பூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ₹25,000 பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது

புதுச்சேரி: திருவண்டார்கோயில் அரசு பெண்கள் பள்ளியில் கணினி, பொருட்களை திருடிய 2 பேர் கைது

Comment here