பிரத்யகம்

இன்றைய சிறப்பு செய்திகள்

Today special news
Rate this post
 • குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
 • ஆவின் ஆரஞ்சு பால் விலை அதிகரிப்பு….. தமிழகத்தில் இன்று முதல் அமல்.
 • மழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
 • வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
 • கோவையில் மாநில அளவிலான கல்லூரி, பள்ளி இடையே படிக்கும் மாணவிகளுக்கு வலுதூக்கும் போட்டி, இன்று மற்றும் நாளை நாளை ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 • வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் அமைக்கப்படவுள்ளது என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 • நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 • டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு : இன்று முதல் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை
 • புதுதில்லி: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. நெட் தேர்வு முடிவுகளை www.ugcnet.nta.nic.in மற்றும் www.ntaresults.nic.in என்ற இணையதள பக்கங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
 • பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ் (பி.சி.சி.) பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலி கிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி பாஸ்போர்ட் சேவை மையங்கள் இன்று (சனிக்கிழமை) சிறப்பு முகாம் செயல்படுகிறது. இந்த சிறப்பு முகாமில் 1,400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கையாளப்பட உள்ளது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.கோவேந்தன் தெரிவித்துள்ளார்.
 • சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று (நவம்பர் 5) முதல் 11 ஆம் தேதி வரை ஒருவார காலத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யட்டு உள்ளது. அதன்படி டிடிகே. சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு மற்றும் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒருவழி பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 • சென்னையில் பெட்ரோல், டீசல் விலை
 • பெட்ரோல் 1லி – 102.63 க்கும்,டீசல் 1லி – 94.24 க்கும் விற்பனை
 • T20 உலகக் கிண்ணம் 2022 அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று காலை 9.30க்கு மோதவுள்ளன.
 • டி20 உலகக்கோப்பையில் இன்று மதியம்1:30க்கு இங்கிலாந்துடன் இலங்கை மோதல்.

Comment here