வானிலை

இன்றைய வானிலை நிலவரம் 

Rate this post

இலங்கை மற்றும் இலங்கையை ஒட்டிய தமிழகம் அருகே நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது மயிலாடுதுறை, காரைக்கால், நாகை , திருவாரூர் , தஞ்சை (தெற்கு) , புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது சற்று பரவலாக மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது மேற்கொண்டு இன்று காலை வரை அவ்வப்போது விட்டு விட்டு சற்று கனமழையை கொடுக்கும் .

சென்னையில் ஒருசில இடங்களில் தற்போது மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது பரவலான கனமழை மற்றும் தொடர்மழைக்கு தற்போது வாய்ப்பில்லை.

புதுச்சேரியிலும் , விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 6:45Am மணிக்கு மேலாக சற்று பரவலாக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது .

காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது ஒருசில இடங்களில் மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது மேற்கொண்டு அடுத்து சற்று பரவலான கனமழை மற்றும் தொடர்மழைக்கும் வாய்ப்பிருக்கிறது மேலான தகவலை பிறகு பதிவு செய்கிறேன் .

நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக மிதமானது முதல் சற்று கனமழைக்கும் மற்றும் சற்று தொடர்மழைக்கும் வாய்ப்பிருக்கிறது .

மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது வடக்கடலோர பகுதிகள், டெல்டா, மற்றும் தென்தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் மிதமானது முதல் சற்று கனழைக்கும் மற்றும் தொடர்மழைக்கும் வாய்ப்பிருக்கிறது .

ஆந்திரா, தெற்கு கர்நாடகம், மாஹே (புதுச்சேரி) , கேரளா மற்றும் இலங்கையில் இன்று பரவலாக கன மற்றும் மிககனமழை மற்றும் தொடர்மழைக்கு வாய்ப்பிருக்கிறது .

Comment here