திருமகன் ஈவேரா மரணம் குறித்து EVKS இளங்கோவனிடம் தொலைபேசி மூலம் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தார்.

இந்திய அரசியல் சாசனம் 158 (2) வது பிரிவின்படி, ஆர்.என்.ரவி ஆளுநராக பதவி வகிப்பவர், ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்க கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
“பிரதமரைப்போல பத்திரிக்கையாளர் சந்திப்பையே அண்ணாமலை தவிர்க்கலாமே?”
-தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்

புதுச்சேரியில் ஜன.31ந்தேதி ஜி.20 நாடுகளின் ஆரம்பகட்ட மாநாடு புதுச்சேரியில் நடைபெறுகின்றது தமிழிசை செளந்தரராஜன் தகவல்.

சென்னை: தலைமைச் செயலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179 பேர்.

ஆண் வாக்காளர்கள் –
3, 04,89, 066 பேர்

பெண் வாக்காளர்கள் –
3,15,43,286 பேர்

மூன்றாம் பாலினித்தவர் 8027

அதிக வாக்காளர் உள்ள தொகுதி, சோழிங்கநல்லூர் – 6,66,295

கவுண்டம்பாளையம் – 4,57,408

குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி துறைமுகம் – 1,070, 125

வெளிநாட்டில் உள்ள வாக்காளர்கள் – 3,310

18, 19 வயதுக்குட்பட்டவர்கள் – 4,66,374 பேர்

வாக்காளர்கள் தங்களின் விவரங்களை சரிபார்க்க – elections.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். 3 கோடியே 82 லட்சம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

குறைந்த வாக்காளர்கள் கொண்ட துறைமுகம் தொகுதி – 1லட்சத்து 70 ஆயிரத்து 125 பேர்.

மேற்கு வங்கம்: முதலமைச்சர் மம்தா பாணர்ஜிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.தனது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி மரியாதை.

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யநாதெல்லா சந்திப்பு.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை உள்ளரங்கில் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்குகள். தமிழக அரசு, காவல்துறை ஜனவரி 19க்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

உத்தராகண்ட்: மாநிலம் ஹல்தாவினி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை. ஒரே இரவில் 50 ஆயிரம் மக்களை வெளியேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது:தலைமை நீதிபதி கருத்து.

ஈரோடு: கிழக்கு தொகுதியில் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.

மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈ.வெ.ரா.வின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி. ஜோதிமணி மற்றும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்பு.

“பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் நேர்காணல் நடத்த விரும்புகிறேன்”அண்ணாமலை என்னை எதிர்கொள்ள தயாரா?
– பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் ட்வீட்.

திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வடமதுரை அருகே சபரிமலை ஐயப்பன் கோவில் சென்று விட்டு ஊர் திரும்பிய பக்தர்களின் கார் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது காயமடைந்தோர் அரசு மருத்துவமனையில் அனுமதி..!
குறுக்கு வழியில் வருபவர் எடப்பாடி: ஓபிஎஸ்.

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி.ஆனால் அதை “குறுக்கு வழியில்” எடப்பாடி பழனிச்சாமி பெற முயல்கிறார்: ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் கடும் தாக்கு.

ஜெயலலிதா மறைவிற்குப் பின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருந்தால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவி தேவைப்பட்டிருக்காது அப்போத செய்யாத எடப்பாடி தற்போது பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர முயல்வது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது: ஓபிஎஸ்.

எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்க கூடாது, அதனால் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தோம்; அனைத்து இறை தலங்களையும் கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறோம்”
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

43,000 பழமை வாய்ந்த கோயில்களை பழமை மாறாமல் குடமுழுக்கு நடத்த உதரவிட்டேன்; தற்போது வரை 3,986 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மத வாதத்திற்க்கு தான் எதிரிகளே தவிர மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல” -சென்னை வில்லிவாக்கத்தில் கோயில் திருப்பணிக்கு ₹50 கோடி நிதி வழங்கும் விழாவில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

ஜனவரி 1ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்புவிழா நடைபெறும்” -ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50% நிறைவடைந்து விட்டதாக உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்!

ஓபிஎஸ் தாயார் மருத்துவமனையில் அனுமதி:

தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் அனுமதி. தாயாரை காண்பதற்காக சென்னையிலிருந்து தேனி செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.