Indiapolitics

நாங்க என்ன வெறும் ரப்பர் ஸ்டாம்பா?: கவர்னர் ரவி ஆவேச பேச்சு…!

Rate this post

நாங்க என்ன வெறும் ரப்பர் ஸ்டாம்பா?: கவர்னர் ரவி ஆவேச பேச்சு…!

இந்த சூழ்நிலையில், கவர்னர் ரவி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், லோக் ஆயுக்தா நாள் விழாவில் பங்கேற்றார். அவர் பேசியுள்ளதாவது: …

கவர்னர் பதவி அமைப்பு முறை முக்கியமானது. லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளை வலுவிழக்க செய்யும் வகையில், திருத்தங்கள் கொண்டு வரப்படும்போது பங்காற்றுவதற்கு, கவர்னர்களுக்கு பொறுப்பு உள்ளது. கவர்னர்கள் அதில் முடிவெடுக்க வேண்டும்; ஏனெனில், கவர்னர்கள் ‘ரப்பர் ஸ்டாம்பு’கள் அல்ல.

கவர்னர் என்ன செய்ய வேண்டும்; செய்யக் கூடாது என்று, அனைத்து வகையான குரல்களும் ஒலிக்கின்றன;அந்த ஒலிகள் முக்கியமில்லை.

முக்கியமானது எதுவென்றால், இந்திய அரசியல் சாசனம் தான். உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும், அரசியல் சாசனத்தை வெளிப்படுத்தும் அமைப்புகள். கவர்னரின் நடவடிக்கைகள் சரியானதா, இல்லையா என்பதை நீதித் துறை முடிவு செய்யும்.

அரசியல் சாசன சட்ட விதி 200ன் கீழ், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவோ அல்லது மசோதாவை தடுத்து நிறுத்தவோ அல்லது ஜனாதிபதி பரிசீலனைக்காக வைத்திருப்பதாகவோ, கவர்னர் அறிவிக்கலாம். அது அரசியல் அமைப்புக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள தி.மு.க.,வுக்கு பதில் அளிக்கும் வகையில், அவரது பேச்சு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Comment here