சென்னை: புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் செல்கின்றன. காலை 7 மணிக்கு மேலும் பனிமூட்டம் நிலவுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமம்பட்டு வருகின்றனர்

துருக்கி: நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,800 ஆக உயர்ந்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் இணையதள தேடுதல் களஞ்சியம் விக்கிபீடியாவுக்கு விதித்த தடையை நீக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் உத்தரவிட்டார். இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து பதிவிட்டதால் விக்கிபீடியாவை அண்மையில் பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.

உடலை வாங்க சம்மதம் தெரிவித்த பெற்றோர்:

அண்ணா சாலையில் சுவர் இடிந்து இளம் பெண் பத்மப்ரியா மரணம் அடைந்த விவகாரம், குற்றவாளிகளை கைது செய்வோம் என காவல்துறை உறுதி அளித்ததை தொடர்ந்து உடலை வாங்கி செல்ல பெற்றோர் ஒப்புதல்.

திருச்செந்தூர்: சுப்பிரமணியசாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது!பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை நிற உடை அணிந்து பாதயாத்திரை வந்து சாமி தரிசனம் செய்த பின்பு கடலில் நீராடி தங்கள் விரதத்தை முடித்தனர்

ஸ்ரீவில்லிப்புத்தூர்: தைப்பூசம் மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி வனப்பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம்மழை பெய்தால் பாதுகாப்பு கருதி மலையேற அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை அறிவிப்பு.

அமெரிக்கா: மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே சீனாவின் ராட்சத பலூன் பறந்த விவகாரம்.அமெரிக்க அதிபர் பைடன் உத்தரவின் பேரில் சீனாவின் ராட்சத பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா.

ஒடிசா; மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 12 கிலோ கஞ்சாவை, கோவைக்கு கடத்தி வந்த 2 பேரை, திருப்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை: போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நடக்கும் ஜெ.தீபாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சியில், ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெய பிரதீப் கலந்துகொண்டுள்ளார்.

கேரளா: முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிமோனியாவால் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் திருவனந்தபுரம் NIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து துருக்கி விரைந்தது 2 மத்திய மீட்பு படை குழு, சிறப்பு மோப்ப நாய் படை உத்தர பிரதேசம், காசியாபாத்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டது பேரிடர் மீட்பு குழு.

சென்னை: பன்னிர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சந்திக்க வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி செய்து முடியாத நிலையில் பொய் பரப்புரைகள் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். ஓபிசி- ஈபிஸ் சந்திக்க வாய்ப்பில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு.